கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் வெடிகுண்டு சோதனை குழுவினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தமிழக காவல் துறை இயக்குநர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படி கரூர் தாந்தோணிமலை மற்றும் குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் குற்றவியல் நீதிமன்ற வளாகங்களில் காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.

மேலும், கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மற்றும் வெடிக்கும் பொருட்களை சோதனை செய்து கண்டறிய உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE