சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜீவானந்தம் என்பவர் விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் பாரில் வேலை செய்து கொண்டிருந்த ஜீவானந்தத்திடம் மர்ம நபர் ஒருவர் கத்தியைக்காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து ஜீவானந்தம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் மீது 30 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.