“அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்திருக்கட்டும்” நடிகர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

By KU BUREAU

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE