தலித்களுக்கு அதிகம் கொடுமைகள் இழைக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: கே.பாலகிருஷ்ணன் சுளீர்

By KU BUREAU

சென்னை: இந்தியாவிலேயே அதிக ஆணவக் கொலை நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தலித் மக்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் கூட, இந்தியாவிலேயே அதிக ஆணவக் கொலை நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தலித் மக்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடி கட்டி பறக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றால், அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் கைவிடப்பட்டு உள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே, தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் தூக்கிபிடித்திருக்கிற சமூக ஒற்றுமை, சாதிகளற்ற சமூகம், சமூக ஒடுக்குமுறை மற்றும் பெண் அடிமைத்தனத்தை முறியடிக்கும் உயர்ந்த நோக்கங்களை தூக்கி பிடிப்பது மட்டுமல்லாமல், அந்த பாதையிலேயே தமிழகம் பயணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரைகூவி அழைக்கிறது” என வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE