‘சமூக நீதிப் பாதையில் பயணிப்போம்’- பெரியாரின் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை!

By KU BUREAU

சென்னை: தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சம உரிமை கிடைக்க வாழ் நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுய மரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்’ என்று விஜய் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE