‘குடும்ப ஆட்சியின் கோரப் பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுவோம்’- உறுதிமொழி ஏற்ற அதிமுகவினர்! 

By KU BUREAU

சென்னை: குடும்ப ஆட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும், தமிழக மக்களைக் காப்பாற்ற சபதம் ஏற்போம். மக்களை வரிகளால் வாட்டி வதைக்கும், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை, வீட்டுக்கு அனுப்புவோம் என எம்ஜிஆர் நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிபொழி ஏற்றனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி, அதிமுக சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் திரளான கட்சித் தொண்டர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும், தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின், 37ம் ஆண்டு நினைவு நாளில் பின்வரும் உறுதிமொழிகளை உளமார ஏற்போம்! ஏழை, எளிய மக்களுக்கு, ஏற்றங்களைத் தருவதற்கு; தமிழக மக்களுக்கு, மாற்றங்களைத் தருவதற்கு; `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தந்தவர் எம்.ஜி.ஆரின் புகழை, எந்நாளும் காப்போம்!

எம்.ஜி.ஆர் தமிழ் மண்ணை தாயாகவும்; தமிழ் மக்களை உயிராகவும் நேசித்தவர். கழக உடன் பிறப்புகளை, ரத்தத்தின் ரத்தங்களாக பூஜித்தவர். தூய உள்ளம் கொண்ட, தாய்மைப் பாசம் கொண்ட எம்.ஜி.ஆர், வகுத்துத் தந்த பாதையில், தடம் மாறாது; தடுமாறாது! சோர்ந்து போகாது; சோரம் போகாது! ஒற்றுமை உணர்வோடு, பயணிப்போம்! பயணிப்போம்! என்று உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!

வீரத்தையும், விவேகத்தையும், கழகத் தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்; அராஜகத்தின் அடையாளம், தீயசக்தி திமுக-வை வீழ்த்துகின்ற எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். அவர்வழி நின்றே, நேர்வழி சென்றால், நாமும் எதிரிகளை வீழ்த்துவோம்! திமுக-வை வீழ்த்திடவே! வீழ்த்திடவே! நேர்மை என்ற வாளெடுத்து; வாய்மை என்ற வேலெடுத்து, மூன்று தேர்தல்களிலும் தொடர் வெற்றி கண்டு, கழகம் தொடர்ந்து வெற்றிகாண,

ஜெயலலிதா என்கிற வீரமங்கையை நமக்குத் தந்திட்டவர், எம்.ஜி.ஆர், மண்ணை விட்டு மறைந்தாலும், நம் நெஞ்சை விட்டு மறையாத, அவரின் வழியிலே; பயணிப்போம்

திமுக ஆட்சியிலே... திமுக ஆட்சியிலே... குடும்பக் கொடி பறக்குது! குடும்பக் கொடி பறக்குது! தமிழ் நாடு கொள்ளைக் கூடாரம் ஆகுது! கொள்ளைக் கூடாரம் ஆகுது! பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, வஞ்சக மனம் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிய திமுக-வை, வேரோடும், வேரடி மண்ணோடும், வீழ்த்திடவே, வீழ்த்திடவே, உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!

எங்கே? எங்கே? நீட் தேர்வு ரத்து எங்கே? கல்விக் கடன் ரத்து எங்கே? சிலிண்டர் மானியம் எங்கே? எங்கே? டீசல் விலை குறைப்பு எங்கே? வெள்ள நிவாரணப் பணிகள் எங்கே? பழைய ஓய்வூதியத் திட்டம் எங்கே? இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை எங்கே? எங்கே? மக்கள் கேள்விக்கு பதில் எங்கே...? பதில் எங்கே? விடமாட்டோம்... விடமாட்டோம்... விடியா திமுக அரசே, பதில் தராமல் விடமாட்டோம்! விடமாட்டோம்!

பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியிலே, விலைவாசி உயர்வு! விலைவாசி உயர்வு! 43 மாதகால திமுக ஆட்சியிலே, மூன்று முறை மின் கட்டண உயர்வு! பால் விலை உயர்வு! குடிநீர் கட்டண வரி உயர்வு! சொத்து வரி உயர்வு! முத்திரைத்தாள் கட்டண உயர்வு! என, மக்களை வரிகளால் வாட்டி வதைக்கும், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை, வீட்டுக்கு அனுப்புவோம் என சபதம் ஏற்போம்.

அதிமுக பொற்கால ஆட்சியிலே, பொற்கால ஆட்சியிலே, மக்கள் நலன் காக்கும், நல்ல நல்ல திட்டங்கள், நாளும், பொழுதும் திட்டங்கள்! ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகங்கள்; எளியவர்கள் நலன் பெறவே அம்மா மருந்தகங்கள்; பள்ளி மாணவர்கள் பயன்பெறவே, மடிக் கணிணி திட்டங்கள்; பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அம்மா இருசக்கர வாகனம்; திருமணம் செய்யும் பெண்களுக்கு, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் - என்றே கழக ஆட்சியின் முத்தான திட்டங்களை முடக்கியது, தீயசக்தி திமுக ஆட்சியே! திமுக ஆட்சியே! அதிமுகவின் புகழை மறைக்காதே! மறைக்காதே! காழ்ப்புணர்ச்சி கொண்டு, கழக அரசின் திட்டங்களை நிறுத்தாதே! நிறுத்தாதே! விடியா திமுக ஆட்சியே! விடியா திமுக ஆட்சியே! உங்கள் கொட்டத்தை அடக்குவோம்! குடும்ப ஆட்சியை அடக்குவோம்.

கொடி பிடிக்கும் தொண்டனையும், கோட்டையில் அமர வைத்து அழகு பார்க்கும் பேரியக்கம் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’. குடும்ப அரசியல் நடத்தியே! நடத்தியே! மகனுக்கு மகுடம் சூட்டியே! மகுடம் சூட்டியே! கொடி பிடிக்கும் தொண்டனை, துச்சமென நினைப்பதுதான் திமுக-வின், வாடிக்கை... வேடிக்கை... இவற்றோடு, அன்றாடம் மக்களை ஏமாற்றி வரும் பொம்மை முதல்வரின், மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி! எடுத்துச் சொல்லி! ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பொய் முகத்தை, வெளிச்சம்போட்டுக் காட்டுவோம்.

குடும்ப ஆட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும், தமிழக மக்களைக் காப்பாற்றவே! காப்பாற்றவே! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியிலே, தீயசக்தி திமுக-வை, விரட்டி அடிக்கவே! விரட்டி அடிக்கவே! சூளுரைப்போம்! சூளுரைப்போம்! கழகத்தைத் தோற்றுவித்த நம் தலைவர், எம்.ஜி.ஆரின் வழியிலேயே, அரை நூற்றாண்டுகால அரசியலுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழைத்து வந்த, ஜெயலலிதா வழியிலேயே, தொடர்ந்து பயணிப்போம்!

மக்கள் விரோத விடியா ஆட்சியை! விடியா ஆட்சியை! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியிலே, வீட்டுக்கு அனுப்புவோம்! வீட்டுக்கு அனுப்புவோம்! ஜெயலலிதாவின் அஞ்சாமையை துணையாய்க் கொண்டு, வீரநடை போடுவோம்! வெற்றி நடை போடுவோம்! விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப! தீய சக்தியை அடியோடு அழித்திட, சபதம் ஏற்கிறோம். தீய சக்தியால் பாதிக்கப்பட்டுள்ள, தமிழ் நாட்டைக் காப்பாற்றிட சூளுரைப்போம்! சூளுரைப்போம்!’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE