சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்தனர்.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (23.12.2024 – திங்கட் கிழமை), தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை விழாவிற்கு வருகை தருமாறு, அதற்கான அழைப்பிதழை தே.மு.தி.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதிஷ் அவர்கள் நேரில் சந்தித்து வழங்கினார். இந்நிகழ்வின்போது, தே.மு.தி.க. துணைப் பொதுச் செயலாளர் ப. பார்த்தசாரதி, விஜய பிரபாகரன், கே. நல்லதம்பி ஆகியோர் உடனிருந்தனர்’ என்றார்