புதுக்கோட்டை திமுக மாநகரச் செயலாளர் செந்தில் மாரடைப்பால் திடீர் மரணம்: அதிர்ச்சியில் மக்கள்

By KU BUREAU

புதுக்கோட்டை: திமுக மாநகரச் செயலாளர் செந்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில் (55) திமுக மாநகரச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். செந்தில் மனைவி திலகவதி நகர்மன்றத் தலைவராகவும் உள்ளார். தற்போது, புதுக்கோட்டை மாநகராட்சியாகியுள்ளது. திமுக மாநகரச் செயலாளர் செந்தில், இன்று காலை உடற்பயிற்சிகள் முடித்துவிட்டு வீட்டின் முன்புறம் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்துள்ளார். அப்போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

உடனே அவருக்கு மருத்துவர் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். செந்திலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாநகர மேயரின் கணவரும், திமுக மாநகரச் செயலாளருமான செந்தில் உயிரிழந்த தகவல் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பிப்ரவரி மாதம் செந்திலின் மகனுக்கு திருமணம் நடக்கவுள்ளது. இதற்காக அழைப்பிதழ்கள் கொடுத்துக் கொண்டிருந்த அவரின் அகால மரணம் திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE