திமுக கூட்டணியில் 25 தொகுதிகள் கேட்குமா விசிக? - திருமாவளவன் அதிரடி பதில்

By KU BUREAU

சென்னை: 25 தொகுதிகள் வேண்டும் என்பது வன்னி அரசின் தனிப்பட்ட கருத்து. கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என நிர்வாகிகள் விரும்புவது இயல்பானதே என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “25 தொகுதிகள் வேண்டும் என்பது வன்னி அரசின் தனிப்பட்ட கருத்து. தவிர அது விசிக நிர்வாகிகளின் விருப்பமும் கூட. கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என நிர்வாகிகள் விரும்புவது இயல்பானதே. விசிக என்றைக்குமே இவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்கூட்டியே வைத்ததில்லை. முந்தைய தேர்தல்களில் நாங்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட்டிருக்கிறோம்” என்றார்.

“2026ல் திமுக கூட்​ட​ணி​யிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப் ​போன்ற கடைநிலை தொண்டர்​களின் மனநிலை என்னவென்​றால், 2026ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்.” என்று ‘இந்து தமிழ் திசை’-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE