கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை டோல்கேட் இன்று (டிச.23) முறைப்படி திறக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் அமைக்கப்பட்ட டோல்கேட்டை இன்று காலை திட்ட இயக்குனர் சக்திவேல் திறந்து வைத்தனர். இன்று முதல் கொத்தட்டை டோல்கேட்டை கடக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க பணி துவங்கியுள்ளது.
சிதம்பரம் கொத்தட்டை டோல்கேட்டில் இருந்து சீர்காழி அரசூர் வரை உள்ள டோல்கேட் நிர்வாகத்தில் பணிகள் நிறைவடையாத நிலையில், டோல்கேட்டை திறப்பு குறித்து, கடந்த இரண்டு நாட்களாக தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு எட்டப்பாடத நிலையிலும், திட்டமிட்டப்படி இன்று டோல்கேட் நிர்வாகம் திறப்பு விழா வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. இதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் டோல்கேட் பகுதியில் திரண்டனர். இதனிடையே, அசம்பாவிதம் ஏற்படாத வகையில், சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் டோல்கேட் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.