சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

By KU BUREAU

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப் பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள 7 துறைமுகங்கலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலை உள்ளதை குறிக்கும் வகையில் 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE