செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் 6 பேரை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: மதுராந்தகம் வட்டாட்சியராக இருந்த துரைராஜ் சிறுசேரி சிப்காட் சிறப்பு வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்து வந்த துரை செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்போரூர் வட்டாட்சியராக இருந்த வெங்கட்ரமணன் திருக்கழுகுன்றம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்போரூர் வட்டாட்சியராக நடராஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராக பணியாற்றி வந்தார். திருக்கழுகுன்றம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த ராதா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மதுராந்தகம் வட்டாட்சியராக கணேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர்ந்து அதன் விவரத்தை தெரிவிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.