துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்: அமைச்சர் கோவி.செழியன்

By KU BUREAU

சென்னை: பல்​கலைக்கழக துணைவேந்​தர்கள் நியமன விவகாரத்​தில் தமிழக ஆளுநர் அரசியல் உள்நோக்​கத்​துடன் செயல்​படு​கிறார். இதை சட்டரீ​தியாக எதிர்​கொள்​வோம் என்று உயர்​கல்​வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்​கழகம், திருச்சி பாரதி​தாசன் பல்கலைக்​கழகம், சேலம் பெரி​யார் பல்கலைக்​கழகம் ஆகிய 3 பல்கலைக்​ழகங்​களுக்கு யுஜிசி பிரதி​நிதி இல்லாமல் தேடுதல் குழுக்களை அமைத்​தது, யுஜிசி விதி​முறை​களுக்​கும் உச்ச நீதி​மன்ற உத்தர​வு​களுக்​கும் முரணானது. எனவே அந்த தேடுதல் குழுக்களை திரும்​பப்பெற வேண்​டும் என்று தமிழக அரசை ஆளுநர் ஆர்.என்​.ரவி வலியுறுத்தி இருந்​தார்.

ஆளுநரின் குற்​றச்​சாட்டுக்கு பதிலளித்து உயர்​கல்​வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளி​யிட்ட அறிக்கை​: துணைவேந்தர் தேடுதல் குழு​வில் யுஜிசி பிரதி​நி​தி​யைச் சேர்ப்பது ஆளுநரின் உள்நோக்​கமாக உள்ளது. மாநில அரசால் ஏற்கெனவே சட்டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட சட்டத்​தில் உள்ள சரத்து​களுக்கு உட்பட்டே யுஜிசி நெறி​முறைகள் ஏற்றுக்​கொள்​ளப்​பட்டன. அப்போதே தேடுதல் குழு அமைக்க சார்ந்த பல்கலைக்கழக சட்டத்​தின் அடிப்​படை​யில் மேற்​கொள்​ளப்​படும் என தெளிவாக அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படியே தேடுதல் குழுக்கள் அமைக்​கப்​பட்​டுள்ளன.

யுஜிசி நெறி​முறைகள் பரிந்​துரை மட்டுமே. அதை அப்படியே கட்டாயம் மாநில அரசுகள் பின்​பற்ற வேண்​டும் என்பது அரசுக்கு அரசியல் உள்நோக்​கோடு கொடுக்​கும் நெருக்கடி ஆகும். பல்கலைக்​கழகங்​களின் செயல்​பாடு​களில் தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு நீதி​மன்றம் ஏற்கெனவே பலமுறை குட்டு​வைத்​தும் அவர் தனது செய்கைகளை மாற்றிக் கொள்ள​வில்லை.

நிதி ஒதுக்​கீடு செய்​யாமல் பல்கலைக்​கழகங்களை முடக்​கும் மத்திய அரசின் செயல்பாட்டை மறைக்கவே ஆளுநர் இப்படி அரசியல் செய்​கிறார் என்பது அப்பட்​ட​மாகத் தெரி​கிறது.

நிர்​வாகக் குளறு​படிகளுக்கு காரணமான தனது செயல்களை ஆளுநர் இனியாவது நிறுத்தி, தமிழகத்​தின் கல்வி வளர்ச்​சிக்கு தனது பங்களிப்பை அளிக்க முன்​வர​வேண்​டும். யுஜிசி பிரதி​நி​தியை நியமிக்க வேண்​டும் என்று கட்டாயப்​படுத்​தும் ஆளுநர், முடிந்​தால் யுஜிசி​யிடம் அதிக நிதியை தமிழக பல்கலைக்​கழ கங்​களுக்கு பெற்றுத் தரலாமே.

மொழி உரிமை, கல்வி உரிமை போராட்​டங்​களைக் கண்ட தமிழகத்​தில் ஆளுநர் தனது அரசி​யலைக் கைவிட வேண்​டும். துணைவேந்​தர்​கள் நியமன ​விவ​காரத்தை தமிழக அரசு சட்​டரீ​தியாக எ​திர்​கொள்​ளும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE