ஜாபர் சாதிக் ஜாமீன் மனு விசாரணை நீதிபதி விலகல்

By KU BUREAU

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்​கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்திருந்​தனர். இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.

அமலாக்​கத்​துறை சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்.ரமேஷ், இரு​வரது ஜாமீன் மனுவை​யும் சிபிஐ சிறப்பு நீதி​மன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அதற்கு முன்​பாகவே உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​யப்​பட்டதாக கூறினார். அதையடுத்து நீதிபதி, கீழமை நீதி​மன்​றத்தில் நிலுவை​யில் இருந்தபோது, எப்படி உயர் நீதிமன்​றத்​தில் மனுதாக்கல் செய்​யலாம் என கேட்டு ​விசா​ரணையில் இருந்து ​வில​குவதாக அறிவித்தார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE