வார்டு மறுவரையறை முடிந்தபின் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியாகும்: நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்

By KU BUREAU

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் முனியன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழகத்​தில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப வார்டு மறுவரையறை, இடஒதுக்​கீடு மற்றும் வாக்​காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகளை விரைந்து முடிக்க தமிழக தேர்தல் ஆணையத்​துக்கு உத்தரவிட வேண்​டும்.

குறிப்பாக உள்ளாட்சி அமைப்பு​களில் பட்டியலினத்​தவர், பழங்​குடி​யினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்​கப்​படும் வார்​டுகள் குறித்து அனைத்து தரப்​பை​யும் ஆலோசித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்​சித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட ஆணையத்​துக்கு உத்தரவிட வேண்​டும் எனக்​கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​திகள் எஸ்.எஸ்​.சுந்​தர், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்​பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் தமிழகம் முழு​வதும் வார்டு மறு வரையறை, பட்டியல் மற்றும் பழங்​குடி​யினத்​தவருக்கான இடஒதுக்​கீடு உள்ளிட்ட மதிப்​பீட்டு பணிகள் முடிந்த பிறகே உள்ளாட்​சித் தேர்தல் குறித்த அறிவிப்​பாணை வெளி​யிடப்​படும். அதுவரை உள்ளாட்​சித் தேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளி​யிடப்​படாது என உத்தர​வாதம் அளித்​தார். அதைப்​ப​திவு செய்து ​கொண்ட நீ​திப​தி​கள், வழக்கை ​முடித்து வைத்து உத்​தர​விட்​டனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE