தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு தராவிட்டால் மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி தருவார்கள்: முதல்வர் ஸ்​டா​லின் கருத்து

By KU BUREAU

சென்னை: தமிழகத்​தின் உரிமைகளை தரவில்லை என்றால், மத்திய அரசுக்கு தமிழக மக்கள் உரிய நேரத்​தில் மீண்​டும் தக்க பதிலடி கொடுப்​பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்ளார். மேலும் நாடாளு​மன்​றத்​தில் ஒட்டு மொத்த தமிழகத்​தின் குரலாக திமுக எம்.பி.க்​களின் ஒலித்​த​தாக​வும் முதல்வர் கருத்து தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் நவ.25 தொடங்கி, நேற்று (டிச.20) முடிவுற்​றது. இத்தொடரில் வீறு​கொண்ட வீரர்​களாக திமுக எம்.பி.க்கள் முழங்​கி​யுள்​ளனர். திமுக எம்.பி.க்கள் செயல்​பாடுகளை பார்த்து நாடே வியந்​துள்ளது. தமிழக நலனுக்காக குரல் கொடுப்​பது, உரிமைகள் தொடர்பான பிரச்​சினைகளை எழுப்பி கவனத்தை ஈர்ப்பது என இரண்​டை​யும் வெற்றிகரமாக செய்​துள்ளனர்.

அதானி விவகாரம், மணிப்​பூர் கலவரம் என நான் பொறுப்​பேற்று பதில் சொல்ல வேண்டிய அனைத்​தி​லும் மவுனம் காக்​கும் பிரதமர், நாடாளு​மன்​றத்​தில் பாஜக​வின​ரால் ஜனநாயகம் படாத​பாடு பட்ட​போதும் வேடிக்கை பார்த்​துக் கொண்​டிருந்​தார். அவையை நடத்த விரும்​புவதை விட முடக்க வேண்​டும் என்றே பாஜக எம்.பி.க்கள் செயல்​பட்டதை காணமுடிந்​தது.

அரசியல் சட்டத்​தின் 75 ஆண்டு விழா கொண்​டாட்​டத்​தின்​போது, அச்சட்​டத்தை உருவாக்​கித் தந்த அண்ணல் அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சரே அவதூறு செய்து, இழிவு​படுத்தி பேசுவது பாஜக​வின் உயர்​வர்க்க பாசிச முகத்தை தோலுரித்​துக் காட்​டி​விட்​டது.

‘ஒரே நாடு; ஒரே தேர்​தல்' முறையை கடுமையாக எதிர்த்​துப் பேசிய டி.ஆர். பாலு, மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதி, பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டம் குறித்​தும் அனல் பறக்கப் பேசிய கனிமொழி, அவைக்​குப் பிரதமரே வருவ​தில்லை என்று முழங்கிய திருச்சி சிவா உள்ளிட்ட ஒவ்வொரு​வரும் ஒவ்வொரு விதத்​தில் மத்திய அரசைத் தட்டி எழுப்​பினர்.

தமிழக மக்கள் “நாற்​பதுக்கு நாற்​பது” என்ற தேர்தல் வெற்றியைத் தந்த​போது, “நாடாளு​மன்றம் சென்று இவர்கள் என்ன செய்யப் போகின்​றனர் என சிலர் கேள்வி எழுப்​பினர். ஆனால் அவர்​களெல்​லாம் வாயடைத்​துப் போகும் அளவுக்கு திமுக எம்.பி.க்​களின் செயல்​பாடு அமைந்​துள்ளது. குறிப்​பாக, இலங்கை ராணுவத்​தால் கைது செய்​யப்​படும் தமிழக மீனவர்கள் விடு​தலை, ரயில்வே திட்​டங்​கள், மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்​கீடு, சமக்ர சிக்‌ஷா அபியான் திட்​டநிதி, பி.எம். கிசான் திட்ட நிதி,
சுங்​கச்​சாவடிகளை ஒழித்​தல், நீட் தேர்வு முறை​கேடு​கள், வக்பு வாரிய சட்டத்​திருத்த எதிர்ப்பு, பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்​காதது. மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட எண்ணற்ற திட்​டங்​களை, தமிழகத்​தின் உரிமைகளை மற்ற மாநில எம்.பி.க்களை காட்​டிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்​பினர்.

ஒட்டுமொத்தத் தமிழகத்​தின் குரலாக திமுக எம்.பி.க்கள் சுட்​டிக்​காட்டிய பிரச்​சினை​கள், 'ஒரே நாடு; ஒரே தேர்​தலை' ஆணித்​தரமாக எதிர்த்த நாடாளு​மன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செவி​களில் உரக்கவே விழுந்​திருக்​கும் என்ற நம்பிக்கை பிறந்​திருக்​கிறது. இதன்​மூலம், மத்திய அரசு தொடர்ந்து, தமிழகத்தை ஓரவஞ்​சனை​யுடன் நடத்த முடி​யாது என்ற செய்தியை நமது எம்.பி.க்கள் அழுத்தம் திருத்​தமாக கூறி​யுள்​ளனர்.

இனி​யும் மத்​திய அரசு ​திருந்​தவில்லை என்​றால், தமிழகத்​தின் உரிமைகளை தர​வில்லை என்​றால், தமிழக மக்​கள் உரிய நேரத்​தில் மீண்​டும் தக்க ப​திலடி ​கொடுப்​பார்​கள். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE