கரூர்: வீரராக்கியம் பகுதியில் நேற்றிரவு மற்றும் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் வீரராக்கியத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
கரூர் மாவட்டத்தில் மாயனூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவிலிருந்தே கனமழை பெய்தது. இதனால் வீரரராக்கியம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளிலும் வெள்ளம் புகுந்தது. மழை வெள்ளம் புகுந்ததில் இரு ஆடுகள் அடித்து செல்லப்ப ட்டன.
பாலராஜபுரம் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி வடிகால்கள் மூலம் மழை வெள்ளம் வடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.