முதுமலையில் பெண் புலி உயிரிழப்பு - அதிர்ச்சியில் வனத்துறை!

By ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை: முதுமலையில் பெண் புலி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வன சரகத்தில் நீரல்லா வேட்டை தடுப்பு முகாம் முன் நிலை களபணியாளர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடார் வயல், தொட்டகட்டி பிரிவு, தொட்டகட்டி வன காவல் பகுதியில் பெண் புலி ஒன்று இறந்து கிடந்ததை பார்த்தனர்.

இது குறித்து தகவலை வன சரக அலுவலர் சிவகுமார் மற்றும் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருணுக்கு தெரிவித்தனர். முதுமலை புலிகள் காப்பக வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் உத்தரவின்படி வன கால்நடை மருத்துவர்கள் இறந்த புலியை உடற்கூராய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE