நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நன்றாகத்தான் பார்க்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

By KU BUREAU

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் கோவை வந்தார். மறைந்த முன்னாள் எம்.பி. இரா.மோகன் வீட்டுக்குச் சென்று அவரது படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர், இரா.மோகனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.

ராகுல் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் திமுக கூட்டணி வசம் வரும். அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்குவது குறித்து, அவர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயலாகும். அம்பேத்கர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இண்டியா கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து, உரிய முடிவெடுக்கப்படும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நன்றாகத்தான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE