கரூர்: ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு 2025ம் ஆண்டுக்கான காலண்டரை விநியோகம் செய்தார்.
விரைவில் 2025ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் அதிமுக சார்பில் பச்சை மற்றும் நீல நிற பின்னணிகளில் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களுடன் 2025ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் அச்சிடப்பட்டுள்ளது.
கரூர் அருகேயுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி பகுதியில் இன்று (டிச.20ம் தேதி) அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு 2025ம் ஆண்டுக்கான காலண்டர்களை வழங்கினார்.
» விருதுநகர்: ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 25 பேர் கைது
» சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு விசாரணை ஜன.27-க்கு ஒத்திவைப்பு: நீதிமன்றம் அதிரடி