உதகையில் ரயில் மறியல் போராட்டம் - விடுதலை சிறுத்தை கட்சியினர் 32 பேர் கைது! 

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

உதகை ரயில் நிலையத்தினுள் நுழைந்த உதகை வட்டாரச் செயலாளர் கோல்டரஸ் தலைமையிலான அக்கட்சியினர், பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி மலை ரயில் மீது ஏறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். உதகையில் 2 பெண்கள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE