பாம்பன் - மன்னார் வளைகுடா கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து அதிகரிப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பாம்பன் - மன்னார் வளைகுடா கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பனில் விசைப்படகு, ஆழ்கடல் விசைப்படகு, நாட்டுப் படகு என என 200-க்கும் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு மீன்பிடிக்காக சென்று வருகின்றனர். பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன்பிடிக்கப்படும் இறால், கணவாய், நண்டு, சிங்கி, ஆகிய மீன்கள் அதிக லாபத்தை தருகின்றன. மேலும், இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது பாம்பன் மன்னார் கடற்பகுதியில் திருக்கை மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இது குறித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது, “மன்னார் கடற்பகுதியில் யானைத் திருக்கை, முள்ளந்திருக்கை, குருவித் திருக்கை, சோனகத் திருக்கை, ஆடாத் திருக்கை, புலியன் திருக்கை, கருவா திருக்கை, பூவாத்திருக்கை, மணற் திருக்கை, வவ்வால் திருக்கை உள்ளிட்ட 10-க்கும் அதிகமான திருக்கை வகை மீன்கள் உள்ளன.

திருக்கைகள் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரையிலும் ரகம் வாரியாக மொத்த வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்படும். மேலும் நல்ல விலை திருக்கை மீன்களுக்கு கிடைக்கும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE