வண்டலூர் பூங்காவில் அமைச்சர் பொன்​முடி ஆய்வு

By KU BUREAU

வண்டலூர்: வண்​டலுார் உயிரியல் பூங்​கா​வில், வனத்​துறை அமைச்சர் பொன்​முடி நேற்று ஆய்வு செய்​தார். அப்போது 180 கி.வோ. திறன்​கொண்ட சூரிய மின் நிலை​யத்தை திறந்து வைத்த அவர் புதுப்​பிக்​கப்​பட்டு வரும் இரவு விலங்கு கூடம், வேடந்​தாங்கல் பறவை கூண்டு ஆகிய​வற்​றை​யும் பார்​வை​யிட்​டார். பூங்கா​வுக்கு வருபவர்​கள், விலங்​குகளை நேரிடையாக கண்டு ரசிப்​ப​தோடு, அவை தொடர்பான திரைப்​படங்களை நவீன தொழில் நுட்​பத்​தில் பார்த்து ரசிக்​கும் வகையில், ரூ. 4 கோடி செலவில், 7 டி தொழில்​நுட்ப தியேட்டர் கட்டப்​பட்​டுள்​ளது.

32 இருக்கைகள் கொண்ட இந்த தியேட்டரை திறந்து வைத்த அமைச்சர் பொன்​முடி, அதில் அமர்ந்து விலங்​குகள் தொடர்​பான, 3 நிமிட திரைப்​படத்தை பார்த்து ரசித்தார். தொடர்ந்து, நீலகிரி வரையாடு முதல் ஒருங்​கிணைந்த கணக்​கெடுப்பு மற்றும் வரையாடு அஞ்சல் தலையை​யும் வெளி​யிட்​டார். இந்த நிகழ்ச்​சி​யில், வனத்​துறை முதன்மை செயலர் செந்​தில்​கு​மார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

முன்னதாக பூங்​கா​வில் ஆய்வு மேற்​கொண்ட அமைச்சர் பொன்​முடியை பூங்​கா​வில் தின கூலி பணியாளராக பணிபுரி​யும் ஊழியர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்​தனர். அப்போது அமைச்சரை சந்தித்த தினக்​கூலி பெண் பணியாளர்​கள், “நாங்கள் 15 ஆண்டு​களுக்கு மேலாக தினக்​கூலி பணியாளராக பணிபுரிந்து வருகிறோம்.

ஆகவே, எங்களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும். தினக்​கூலியை உயர்த்தி வழங்க வேண்​டும்” என்று கோரிக்கை விடுத்​தனர். இதற்கு அமைச்சர் பொன்​முடி, “தொடர்ச்​சியாக 10 ஆண்டுகள் தினக் கூலி பணியாளராக பணிபுரிந்த ஊழியர்கள் பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள்.

10 ஆண்டுகள் இடை இடையே பணி செய்​தவர்கள் பணி நிரந்​தரம் செய்​யப்பட மாட்​டார்​கள்” என்று தெரி​வித்​தார். அமைச்​சருடன் சுற்றுச்​சூழல் மற்றும் வனத்​துறை முதன்​மைச் செயலர் டாக்​டர். பி. செந்​தில் குமார், முதன்மை தலைமை வனப் பாது​காவலர் சீனிவாஸ் ரெட்டி, வன​விலங்கு ​காப்​பாளர் ராகேஷ் கு​மார் டோக்ரா, வனத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்​தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE