எண்​ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம்: கருத்து கேட்பு கூட்​டத்​தில் சீமான் பங்கேற்பு

By KU BUREAU

சென்னை: தமிழ்​நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்​மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் நிலக்கரி அனல் மின் நிலைய
விரிவாக்​கத்​துக்கு, தென்​மண்டல தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் உத்தர​வின்படி புதிய சுற்றுச்​சூழல் அனுமதி பெறு​வதற்காக கருத்​துக் கேட்பு கூட்டம் வரும் டிச.20-ம் தேதி திரு​வள்​ளூர் மாவட்டம் எர்ணாவூரில் நடைபெறவுள்​ளது.

இது தொடர்பான கருத்​துக் கேட்பு கூட்​டத்​தில் நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் பங்கேற்க இருப்பதாக அறிவித்​துள்ளார். அவர் வெளி​யிட்ட அறிக்கை​: கடுமையான சுற்றுச்​சூழல் பாதிப்​புக்கு உள்ளாகி, அவதிப்​பட்டு வரும் எண்ணூர் பகுதி​யில், மீண்​டும் ஓர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்​வைக்​கப்​படு​கிறது.

இதையொட்டிய கருத்​துக் கேட்பு கூட்​டம் நடைபெறவுள்​ளது. நிலம், நீர், காற்று போன்ற அனைத்​தும் மாசுபட்டு ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்பு​களைச் சந்தித்து​வரும் எண்ணூர் மக்களின் குரலாக இக்கூட்​டத்​தில் பங்கேற்று, எனது கருத்துகளை பதிவு செய்​ய​வுள்​ளேன். இந்தக் கூட்​டத்​தில் பொது​மக்கள் அனைவரும் திரளாக கலந்​து​கொண்டு, தங்களது கருத்து​களை​யும் ப​திவு செய்​வதன் மூலமே சூழலியல் பாது​காப்பை உறு​திப்​படுத்த ​முடி​யும். இவ்​வாறு அ​தில் தெரி​வித்​துள்ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE