எந்த சாதியினரும் கோயில் கருவறைக்குள் செல்ல முடியாது: கஸ்தூரி கருத்து

By KU BUREAU

சென்னை: இளை​யராஜாவாக இருந்​தா​லும் சரி, நானாக இருந்​தா​லும் சரி, கோயில் கருவறைக்​குள் எந்த சாதி​யினரும் செல்ல முடி​யாது என நடிகை கஸ்தூரி தெரி​வித்​துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலால​யத்​தில் பாஜக மாநில தலைவர் அண்ணா​மலையை சந்தித்த நடிகை கஸ்தூரி செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இளையராஜா என்பவர் இசைக் கடவுள். கடவுள் கோயிலுக்​குச் செல்ல வேண்டிய அவசியம் கிடை​யாது.

இளையராஜாவை கோயில் கருவறைக்​குள் விடவில்லை என்ற சர்ச்சை கிளம்​பி​யுள்​ளது. அதை நான் வன்மையாக கண்டிக்​கிறேன். கோயில் கருவறைக்​குள் எந்த சாதி​யினரும் செல்ல முடி​யாது. அது இளையராஜாவாக இருந்​தா​லும் சரி, கஸ்தூரியாக இருந்​தா​லும் சரி. கருவறைக்​குள் அர்ச்​சகர்கள் மட்டுமே செல்ல முடி​யும்.

தமிழகத்​தில் எந்த சாதி​யினரும் அர்ச்​சகர் ஆகலாம். அதனால், அர்ச்​சகர்கள் எந்த சாதியாக இருந்​தா​லும் கருவறைக்​குள் செல்​லலாம். தற்போது இளையராஜா விவகாரத்தை திரித்து பேசுவது சரியல்ல. இதுபோன்ற வன்ம​போக்கை கண்டித்து தான் நான் நவ.3-ம் தேதி ஆர்ப்​பாட்​டத்​தில் பேசினேன்.

அதைத்​தான் தற்போதும் பேசுகிறேன். இளையராஜா கருவறைக்​குள் செல்லவே முயற்சிக்க​வில்லை. அவருக்கு மரியாதை செலுத்து​வதற்காக ஓரிடத்​தில் நிற்க வைத்​தனர். ஒரு குறிப்​பிட்ட இடத்​தில் அவரை நிற்க சொன்னது​தான் தற்போது பெரிதுபடுத்தி திரித்து பேசுகின்​றனர். திமுக ஆட்சியை அகற்றி தமிழகத்​தில் புதிய காற்று வீச வேண்​டு​மானால், அதற்கு அனைவரும் ஒரு​மித்த கருத்​துடன் இணைந்து தேர்தலை சந்​திக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறினார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE