ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு

By KU BUREAU

சென்னை: அ​முதா, அபூர்வா, காகர்லா உஷா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலர்​களாக பதவி உயர்வு பெற்றுள்​ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் நா.முரு​கானந்தம் வெளி​யிட்ட அறிவிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1994-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி​களான, அரசுத் துறை செயலர்கள் பி.அ​முதா (வரு​வாய்), அதுல் ஆனந்த் (குறு, சிறு, நடுத்தர தொழில்கள்), காகர்லா உஷா (வீட்டு​வசதி, நகர்ப்புற வளர்ச்​சி), அபூர்வா (வேளாண்​மை), மத்திய அரசுப் பணியில் புதிய மற்றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை கூடுதல் செயலராக உள்ள சுதீப் ஜெயின் ஆகிய 5 பேருக்​கும், செயலர் நிலை​யில் இருந்து தலைமைச் செயலர் அந்தஸ்​துக்கு பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் இவர்கள் கூடுதல் தலைமைச் செயலர்கள் ஆகியுள்​ளனர்.

இதையடுத்து, வருவாய், குறு சிறு நடுத்தர தொழில்​கள், வீட்டு வசதி - நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை ஆகிய துறை​களின் செயலர் பதவிகள் கூடுதல் தலைமைச் செயலர் நிலைக்கு உயர்த்​தப்​படு​கின்றன. இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE