5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த 1994ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளான, வருவாய்த்துறை செயலராக உள்ள பி.அமுதா, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக உள்ள அதுல் ஆனந்த், மத்திய அரசுப் பணியில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை கூடுதல் செயலராக உள்ள சுதீப் ஜெயின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலராக உள்ள காகர்லா உஷா, வேளாண்துறை செயலராக உள்ள அபூர்வா ஆகியோர், செயலர் நிலையில் இருந்து தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் கூடுதல் தலைமைச் செயலர்களாகியுள்ளனர்.

இதையடுத்து, வருவாய்த்துறை செயலர், குறு, சிறு நடுத்தரத்தொழில்கள் துறை செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர், வேளாண்துறை செயலர் பதவிகள் கூடுதல் தலைமைச்செயலர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE