சென்னை: வெளிநாட்டு பாணியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விரும்புவோருக்கு, சென்னை சவேரா ஓட்டல் அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் தங்களது குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு, விருப்பமான உணவுகளை உண்டு மகிழவே விரும்புவர். சிலர் வெளிநாடுகளில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸை போலவே நம் நகரங்களிலும் நடத்தப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நினைப்பர்.
இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சவேரா ஓட்டல் நிர்வாகம், கிறிஸ்துமஸ் பண்டிகையை வெளிநாட்டு பாணியில் கொண்டாட விரும்புவோர், குடும்பத்துடன் வருகை தந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ள நிர்வாகத்தினர், குடும்பமாக வருவோருக்கு சலுகளைகளையும் வழங்குகிறது.
இது தொடர்பாக சவேரா ஓட்டல் மேலாண்மை இயக்குநர் நினா ரெட்டி கூறுகையில், “ இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் ‘பிரகாசிக்கும் காலம்’(Season of Sparkle) என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அனைத்தும் பிரகாசமாக, அழகாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதையொட்டி டிச.1 முதல் டிச.25-ம் தேதி ஓட்டல் முழுவதும் பலவிதமான அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘பியானோ’ பஃபே சிறப்பு உணவகமும், உணவருந்தும் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.
» மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள்: 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு - ராமதாஸ் கோபம்
» இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் மிகமிகக் குறைவு: தமிழக அரசு பெருமிதம்
இதில் இந்திய பாரம்பரிய உணவு வகைகளுடன், வெளிநாட்டு வகை உணவுகளான பர்கர், பீட்சா, ஹாட் டாக், ரொட்டி, கேக், பாஸ்ட்ரீஸ், குக்கீஸ், காஃபி, ஐஸ்கிரீம், மாக்டெயில் போன்ற பண்டிகை பானங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கொண்டாடங்களுக்கும், கேரல் பாட்டுகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் சலுகைகளாக 5 பேராக வருவோருக்கு 3 பேருக்கும், 3 பேராக வருவோருக்கு 2 பேருக்கும் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம் அனைவரும் சிறப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.” என்று இயக்குநர் நினா ரெட்டி கூறினார்.
சவேரா ஓட்டல் நிர்வாகத்தின் பொதுமேலாளர் குமார், உணவு மற்றும் பானங்களுக்கான பிரிவு பொது மேலாளர் சம்பத், சமையல் நிபுணர் ஜெசு லாம்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.