ஆதவ் அர்ஜுனா உடனே எதையும் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார்: திருமாவளவன் சுளீர் பதில்

By KU BUREAU

ஆதவ் அர்ஜுனாவிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது. உடனே எதையும் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார். ஒரு கட்சிக்குள் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கூட, அந்த கட்சிக்கு கட்டுப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆதவ் அர்ஜுனாவிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது. உடனே எதையும் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார். ஒரு கட்சிக்குள் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கூட, அந்த கட்சிக்கு கட்டுப்பட வேண்டும். அவரது கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் கூட கட்சியின் நடைமுறைக்கு இணங்க வேண்டும். இதை அவரிடம் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறோம். இந்நிலையில் ஆதவ் கட்சியில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவு, அவருக்கு சரி என்கிற அடிப்படையில் எடுத்திருக்கிறார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை.

இடைநீக்கம் குறித்து பொதுவெளியில் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து கட்சிக்கு எதிராகவும், கட்சி தலைமைக்கு எதிராகவும் இருந்தது. அந்த விளக்கம் அவருடைய பார்வையில் சரியானதாக இருந்தால் கூட, ஒரு கட்சியின் நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. தனக்கு எல்லாம் தெரிந்தாலும் கூட, பேசுவதெல்லாம் சரிதான் என்றாலும் கூட கட்சியுடன் இணைந்து, கட்சி கட்டுப்பாட்டுக்குள் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE