தனது மிகவும் விருப்பமான நட்பு நாடுகளில் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து, இந்தியாவின் பெயரை நீக்கியுள்ளது பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த திடீர் நீக்கத்தின் எதிரொலியாக சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் இந்திய நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளும், வரிகளும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று 2025 ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்தியாவுடனான 1994 இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (டிடிஏஏ) விதியை சுவிட்சர்லாந்து இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுவிட்சர்லாந்தின் நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் மேகி, நெஸ்லே உட்பட சுவிட்சர்லாந்து நாட்டு தயாரிப்பு பொருட்களின் விலைகள் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படலாம். இந்த நடவடிக்கை நெஸ்லே போன்ற சுவிஸ் நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்க வழிவகுக்கும். அவர்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்தும்.
நெஸ்லே போன்ற சுவிஸ் நிறுவனங்கள் இப்போது 10% வரை அதிக ஈவுத்தொகை வரி விகிதத்தை செலுத்தும், முன்பு இது குறைந்த விகிதத்தில் இருந்தது. ஸ்லோவேனியா மற்றும் லிதுவேனியா போன்ற பிற நாடுகளுடன் DTAA உடன்படிக்கைகள் இருப்பதால் 5% வரி விகிதம் கோரி நெஸ்லே மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அவர்களின் மேல்முறையீட்டை நிராகரித்ததால் அத்தகைய நிறுவனங்களின் வரிச்சுமை அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.