அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

By KU BUREAU

சென்னை வானகரத்தில் இன்று காலை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்து வரும் நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் விவரங்கள் வருமாறு:

ஃபெஞ்சல் புயலில் சரியாக செயல்படாத திமுக அரசுக்கு கண்டனம்

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம்

டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்

ஃபார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்

குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம்

வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்து நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம்

சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம்

கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE