கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்து ரூ.40 கோடிக்கு தீருதவிகள்!

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து தீருதவிக்கான ஆணையை வழங்கினார் மாவட்ட நீதிபதி ரா.சண்முகசுந்தரம்.

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று (டிச. 14ம் தேதி) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ரா.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து சமரச தீர்வு ஏற்பட்டவர்களுக்கான தீருதவி ஆணைகளை வழங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி பி.தங்கவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ப.அனுராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி ரா.சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியது: “நிகழாண்டின் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. கரூரில் 4, குளித்தலையில் 2, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தலா 1 என மொத்தம் 8 அமர்வுகள் நடைபெறுகின்றன. இதில் சுமூக தீர்வுக்கான உடன்பாடான 1,564 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு கடந்த 1 வாரமாக நடந்த முன் அமர்வில் 10 வழக்குகளில் ரூ.1,38,64,014க்கு தீர்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முந்தைய நிலையில் வங்கி தொடர்பான 400 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 124 வழக்குகளில் ரூ.95,60,361க்கு தீர்வு காணப்பட்டது.

நிகழாண்டு மார்ச் 9ம் தேதி நடந்த முதல் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,370 வழக்குகளில் ரூ.15,77,90,988, கடந்த ஜூன் 8ம் தேதி நடந்த 2வது தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,049 வழக்குகளில் ரூ.10,59,65,88, கடந்த செப். 16ம் தேதி நடந்த 3வது தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,569 வழக்குகளில் ரூ.13,77,22,117 என கடந்த 3 தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 3,988 வழக்குகளில் ரூ.40,14,78,985 கோடிக்கு தீருதவி காணப்பட்டுள்ளன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE