அமைச்சர்கள், திமுக எம்எல்ஏ-க்களின் ஒரு மாத ஊதியம் ரூ.1.30 கோடி - நிவாரணத்துக்காக முதல்வரிடம் வழங்கல்!

By KU BUREAU

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள் மற்றும் காசோலைகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE