‘மாநிலங்களின் குரலை அழிக்கும், கூட்டாட்சியியலைச் சிதைக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டமுன்வடிவை தாக்கல் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:
கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை மாநிலங்களின் குரலை அழித்துவிடும், கூட்டாட்சியியலைச் சிதைத்துவிடும், அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையை ஏற்படுத்தும். எழுக இந்தியா. இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலை நம் ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
» 5.8 லட்சம் பட்டதாரிகள் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
» அனைவரும் சமம் என்று சனாதனம் அறிவுறுத்துகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து