தீபத் திருவிழா: திருவண்ணாமலை வழியாக செல்ல கனரக, இலகுரக வாகனங்களுக்கு தடை

By KU BUREAU

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு திரு வண்ணாமலை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் கனரக, இலகுரக வாகன போக்குவரத்து இன்று காலை 8 மணி முதல் வரும் டிச.15-ம் தேதி காலை 6 மணி வரை தடை செய்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மகா தீபத் திருவிழாவில் 2,668 அடி உயர முள்ள மலை மீது ஏற்றப்படும் தீப தரிசனம் மற்றும் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக் தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் வருகையால் நகரில் நெரிசல் ஏற்படும் நிலையில் திருவண்ணாமலை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் இன்று (12-ம் தேதி) காலை 8 மணி முதல் வரும் டிச.15-ம் தேதி காலை 6 மணி வரை செல்ல தடை விதிக்கப் படுவதுடன், இந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுவதாக மாவட்ட காவல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி செல்ல வேண்டிய கனரக, இலகுரக வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திரு வண்ணாமலை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மாற்றாக, பர்கூர், வாணி யம்பாடி, வேலூர், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழி யாகச் செல்ல வேண்டும். இதே சாலையை புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் இருந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூருவுக்கு செல்லும் கனரக, இலகுரக வாகனங்கள் பயன்படுத்த வேண்டும்.

அதேபோல், திருப்பதி, கே.ஜி,எப், வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

மாற்றாக வேலூர், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக செல்ல வேண்டும். மறுமார்க் கத்திலும் இதே சாலையை பயன்படுத்த வேண்டும். மேற் கண்ட வானங்கள் செஞ்சி, கீழ் பென்னாத்தூர், திருவண்ணா மலை வழியாக செல்லவும் அனுமதியில்லை.

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் இருந்து விருதாச் சலம், சிதம்பரம், நாகப்பட்டிணம் செல்ல வேண்டிய கனரக, இலகுரக வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, திருக்கோவி லூர் வழியாக செல்ல அனுமதி யில்லை. மாற்றாக, தருமபுரி, தொப்பூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர் வழியாக செல்ல வேண்டும்.

மறுமார்க்கத்தில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் செல்ல வேண்டிய வாகனங் கள் திருக்கோவிலூர், மணலூர் பேட்டை, சங்கராபுரம், திருவண்ணாமலை வழியாக செல்லவும் அனுமதி இல்லை. மாற்றாக ஆத்தூர், வாழப்பாடி, சேலம், தொப்பூர், தருமபுரி வழியாக செல்ல வேண்டும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE