தங்கத்தை விடுங்க... இதை கவனிச்சீங்களா... வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் எகிறியது!

By KU BUREAU

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை நேர விலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்துள்ளது. இதன்படி சவரனுக்கு ரூ.600 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் 9ம் தேதி காலை நேர விலை நிலவரப்படி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 75 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

அதே சமயம் இன்றைய காலை நேர வர்த்தக நிலவரப்படி வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.104-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE