மாவோயிஸ்ட் நிதி என்று கூறி மாணவி கல்வி கட்டணத்தை முடக்கிய என்ஐஏ உத்தரவில் தலையிட முடியாது: நீதிமன்றம் மறுப்பு

By KU BUREAU

சென்னை: ​மாவோ​யிஸ்ட் நிதி​யில் இருந்து செலுத்​தப்​பட்​டதாக கூறி சென்னை​யில் உள்ள மருத்துவ மாணவி​யின் கல்வி கட்ட​ணத்தை முடக்கி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிறப்​பித்த உத்தர​வில் தலையிட முடி​யாது என உயர் நீதி​மன்ற நீதிப​திகள் உத்தர​விட்​டுள்​ளனர்.

சென்னை​யில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி​யில் படிக்​கும் மாணவிக்கு ஜார்​க்கண்ட் மாநில மாவோ​யிஸ்ட் அமைப்​பின் மூலம் கல்வி கட்டணம் செலுத்​தப்​பட்​டுள்ளதாக கூறி, அந்த தொகையை முடக்கி தேசிய புலனாய்வு முகமை உத்தர​விட்​டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அந்த மாணவி வழக்கு தொடர்ந்​தார்.

நீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​ரமணி​யம், எம்.ஜோ​திராமன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்தது. அப்போது, மாணவி தரப்​பில், “கல்​லூரி​யில் ரேங்க் அடிப்​படை​யில் முதல் 5 இடங்​களில் உள்ள மனுதா​ரரின் கல்வி கட்ட​ணத்தை என்ஐஏ முடக்கி வைத்​துள்ள​தால், சான்றிதழ் தர கல்லூரி நிர்​வாகம் மறுக்​கிறது. மேலும், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகு​மாறு மனுதா​ரருக்கு என்ஐஏ சம்மன் அனுப்​பி​யுள்​ளது” என்று வாதிடப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து நீதிப​திகள் கூறிய​தாவது: என்ஐஏ சம்மன் அனுப்​பி​யுள்ள​தால், மாணவிஆஜராகி உரிய விளக்கம் அளித்து, கல்வி கட்டணம் முடக்​கப்​பட்டதை நீக்​கு​மாறு கோரலாம். நன்றாக படிக்​கும் ஒருவர் எதிர்​காலத்தில் தீவிரவாத அமைப்​பில் சேர மாட்டார் என்பதற்கு எந்த உத்தர​வாத​மும் இல்லை.

ஜோர்​டான் போன்ற நாடு​களில் நன்றாக படித்​தவர்​கள்​தான் ஐஎஸ்​ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்பு​களில் சேரு​கின்​றனர். எனவே, இந்த விவகாரத்தில் நீ​தி​மன்​றம் தலையிட ​முடி​யாது. இவ்​வாறு கூறிய நீ​திப​தி​கள், வழக்கை தள்​ளுபடி செய்து உத்​தர​விட்டுள்​ளனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE