கோவையில் காவல்துறையை கண்டித்து ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

By இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் சார்பில் கோரிக்கைகளுக்காக போராடும் ஜனநாயக உரிமைகளை தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறை கைவிடக்கோரி கோவை மத்திய தந்தி அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணை தலைவர் எஸ்.மோகன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் “போராடும் உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் மட்டுமே காவல்துறை அனுமதி வழங்குகிறது. ஜனநாயக உரிமைகளை மறுக்கும் போக்குகளை காவல்துறை கடைபிடித்து வருகிறது” என கோஷமிட்டனர்.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல், மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், செல்வம், சுப்பிரமணியம், வழக்கறிஞர் சக்திவேல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE