தவெக-வில் இணைந்த தருமபுரி கிழக்கு மநீம மாவட்ட செயலாளர்!

By KU BUREAU

அரூர்: அரூரில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகி, தவெக-வில் இணைந்தார். தருமபுரி மாவட்டம் அரூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

ரத்ததான முகாம், மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் மற்றும், மாற்றுகட்சியினர் தவெக வில் இணையும் விழா என நடந்த இம்முப்பெரும் விழாவுக்கு அரூர் நகர தலைவர் மதலைமுத்து தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் தாபா.சிவா கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த மாலை நேர பாடசாலையில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினர்.

இவ்விழாவின் போது, தருமபுரி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளரான ஜி.எம்.னிவாசன் தனது பொறுப்பினை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில்

இணைத்துக் கொண்டார். விழாவில் இளைஞரணி தலைவர் கே.விஜயகாந்த், தொகுதி ஒருங்கிணைப்பாளர் என்.மேகநாதன், ஒன்றிய தலைவர் எம்.சக்பால், இளைஞரணி தலைவர் ஜெ.நவின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE