கள்​ளச்​சாராய உயிரிழப்பு வழக்கை சிபிஐ விசா​ரிக்க தடை கோரும் மனுவை திரும்ப பெற வேண்​டும்: ஓபிஎஸ்

By KU BUREAU

சென்னை: கள்ளக்​குறிச்சி கள்ளச்​சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசா​ரிக்க தடை கோரி தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்துள்ள மேல்​முறை​யீட்டு மனுவை திரும்​பப்பெற வேண்​டும் என்று முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை: கள்ளக்​குறிச்​சி​யில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்​சா​ராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்​தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தர​விடக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தர​விட்​டது. இதை எதிர்த்து திமுக அரசு மேல்​முறை​யீடு செய்​துள்ளது வழக்கு விசா​ரணையை தாமதப்​படுத்து​வதோடு, குற்​றவாளிகளை தப்பிக்கவிட அரசு முயற்சி செய்​கிறதோ என்ற சந்தேகம் எழுந்​துள்ளது.

வழக்கை சிபிஐ​யிடம் ஒப்படைப்​ப​தில் திமுக​வுக்கு என்ன தயக்கம் என்று தெரிய​வில்லை. சிபிஐ விசா​ரித்​தால், கள்ளச்​சாராய விற்​பனைக்கு திமுக மறைமுகமாக ஆதரவு அளித்தது வெளிச்​சத்​துக்கு வந்து​விடுமோ என்ற தயக்கம் இருக்​கிறதோ என்னவோ தெரிய​வில்லை.

ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்​கில் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், கள்ளச்​சாராய விற்​பனை​யிலும் திமுக​வினரின் கைவரிசை இருக்​குமோ என்ற சந்தேகம் மக்களிடம் வலுவாக எழுந்​துள்ளது.

எனவே கள்ளக்​குறிச்சி கள்ளச்​சாராய வழக்கை சிபிஐ விசா​ரித்து உண்மைக் குற்​றவாளிகளை கண்டு​பிடித்து, அவர்களை சட்டத்​தின்​முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்​டும். அதற்காக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்​பட்ட மேல்​முறை​யீட்டை திரும்​பப் பெற வேண்​டும். இவ்​வாறு அறிக்கையில் கூறப்​பட்டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE