கரூர்: நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில், ரூ.2.61-க்கு ஒரு யூனிட் மின்சாரம் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர் கோடங்கிப்பட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மின்வாரியம் சம்பந்தமாக தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் சந்தித்ததில்லை என்று தெரிவித்த பிறகும், இதுகுறித்த கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.01-க்கு வாங்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்துக்கு நாங்கள் தடையாணை கேட் டும் வழங்கப்படவில்லை. அதனால், அதற்கான நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
» இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் சிறைபிடிப்பு
» டெல்லிக்கு பேரணி சென்ற விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு
ஆனால், திமுக அரசுதான் அந்த ஒப்பந்தத்தை போட்டதைப்போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி ஒருபோதும் எடுபடாது. அதுகுறித்து மக்களுக்கு தெளிவாக தெரியும்.
தற்போதைய ஆட்சியில், மத்திய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதன்மூலம் நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.61-க்கு தமிழக மின் வாரியத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது.
எந்த இடத்திலும் மக்கள் செல்வாக்கு இல்லாத நபர் களுக்கு, ஊடகங்கள்தான் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.