மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் புதிய இடத்துக்கு மாற்றம்

By கி.மகாராஜன்

மதுரை: மதுரையில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த கடன் வசூல் தீர்ப்பா யம் மத்திய அரசு அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வங்கி கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் சென்னை, கோவை, மதுரையில் செயல்பட்டு வருகிறது. மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் 2007 முதல் உத்தங்குடி- பண்டிகோவில் சுற்றுச்சாலையில் இயங்கி வந்தது. இங்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட மதுரை உள்பட 14 மாவட்டங்களில் கருர் தவிர்த்து மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 13 மாவட்டங்களை சேர்ந்த வங்கி கடன் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் தனியார் கட்டிடத்தில் சிறிய இடத்தில் செயல்பட்டு வந்த மதுரை தீர்ப்பாயத்தை பெரிய கட்டிடத்துக்கு மற்ற வேண்டும் என வாழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கைவைத்தது. இதையடுத்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் அருகே பிஎஸ்என்எல் கட்டிட வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய கட்டிடத்தை உயர் நீதிமன்றம் ஓய்வு நீதிபதியும் சென்னை கடன் வசூல் தீர்ப்பாயம் தலைவருமான ஜி சந்திராசேகரன் திறந்து வைத்தார். மதுரை கடன் வசூல் தீர்ப்பாய தலைவர் சீமா சின்ஹா தலைமை வகித்தார். மதுரை கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்கம் தலைவர் வி.வீரபாண்டியன், துணைத் தலைவர் ஏ. வடமலை கண்ணன், பொதுச் செயலாளர் எம். செந்தில்குமார், துணை பொது செயலாளர் எஸ் சுரேஷ், பொருளாளர் ஆர். பாண்டிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீபாலாஜி, ஆனந்தராஜ், தேவன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE