தற்காலிக அதிகாரத்துக்காக அம்பேத்கரின் வழியில் இருந்து நழுவ முடியாது: திருமாவளவன் உறுதி

By KU BUREAU

சென்னை: தற்​காலிக அதிகாரத்​துக்காக அம்பேத்​கரின் வழியில் இருந்து விசிகவால் நழுவ முடி​யாது என அக்கட்​சி​யின் தலைவர் திரு​மாவளவன் தெரி​வித்​தார்.

சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்​தில் அம்பேத்​கரின் வாழ்க்கை குறித்து அவரது உறவினர் ஆனந்த் டெல்​டும்டே எழுதிய ஆங்கில நூல் (iconoclast) அறிமுக விழா நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பேசி​ய​தாவது:

விசிக தலைவர் திரு​மாவளவன்: எல்லோரும் அம்பேத்​கருக்கு பிறந்​தநாள் கொண்​டாடு​வதன் மூலம் அவரை இந்து தலைவராக அடையாளப்​படுத்தி விழுங்கப் பார்க்​கின்​றனர். இதைத் தடுப்பது நம் முன் இருக்​கும் சவால். தற்காலிமான அதிகாரத்​துக்காக அம்பேத்​கரின் வழியில் இருந்து நம்மால் நழுவ முடி​யாது. 4 எம்எல்​ஏக்கள் போதாது 10 வேண்​டும் என்ப​தில் என்ன வளர்ச்சி இருக்​கிறது?

தேர்​தல், வெற்றி, கூட்டணி என்ப​தெல்​லாம் இரண்​டாம் கட்ட​மானது என்றாலும் அதிலும் தெளிவாக இருக்க வேண்​டும். இதற்கான மோதலே நடைபெற்று வருகிறது. அவர்கள் விரும்​புவதை நாம் செய்ய வேண்​டும் என்று எதிர்பார்க்​கின்​றனர். அந்த எதிர்​பார்ப்பு​களுக்கு எதிர்​வினை​யாற்றவா கட்சி நடத்து​கிறோம். அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா, என எங்களுக்கு பேராசை​ இல்லை.

என்னை, பாமக நிறு​வனர் ராமதாஸைப் பின்​பற்று​மாறு ஒருவர் கூறுகிறார். நாங்கள் 100 சதவீதம் அம்பேத்கரை பின்​பற்றுகிறவர்​கள். எங்களுக்கு அவர் வணிகப்​பொருள் கிடை​யாது. கருத்​தியல் அடையாளம். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர வேண்​டும் என்பது விசிக​வின் நோக்​கங்​களுள் ஒன்று. அந்த அதிகாரம் எதற்​குப் பயன்பட வேண்​டும் என்னும் தெளிவோடு அனைத்​தை​யும் அணுகு​கிறோம். நாங்கள் கருத்​தி​யலில் எவ்வளவு உறுதி​யோடு இருக்​கிறோம் என்பதை ஒவ்வொரு முறை​யும் உறுதிப்​படுத்த தேவை​யில்லை.

நூலாசிரியர் ஆனந்த் டெல்​டும்டே: தமிழகத்​தைத் தவிர அனைத்து மாநிலங்​களி​லும் பாஜகவை பட்டியலினத்​தவர்கள் ஆதரிக்கக் கூடிய நிலை உருவாகி​ விட்​டது. அம்பேத்கர் எனது கடவுள் என்கிறார் பிரதமர் மோடி. இதை நம்பி மக்கள் ஏமாறுகின்​றனர். அம்பேத்​கரின் செயல்​பாடுகள் மூலம் நாம் அவரைப் புரிந்​து​கொள்ள வேண்​டும். அவர் எதிர்​பார்த்த தாக்​கத்தை சமூகத்​தில் ஏற்படுத்த வேண்​டும்.

விசிக பொதுச்​செய​லாளர் துரை.ரவிக்​கு​மார்: அம்பேத்​கரின் அரசி​யல், அவர் மீதான விமர்​சனம் என பல்வேறு பார்​வை​யில் நூலை ஆனந்த் டெல்​டும்டே எழுதி​யுள்​ளார். எனினும், இந்த புத்​தகத்​தில் விசிக​வின் பங்களிப்பு இடம்​பெற​வில்லை என்பது எனது மனக்​குறை. விசிகவை உள்ளடக்கிய அடுத்த பதிப்பை வெளியிட வேண்​டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்நிகழ்​வில், எம்எல்​ஏ-க்கள் எஸ்.எஸ்​.பாலாஜி, பனையூர் பாபு, ஆளுர் ஷாநவாஸ், மாநில திட்​டக்​குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்​சன், மூத்த பத்திரி​கை​யாளர்கள் ஏ.எஸ்​.பன்னீர்​செல்​வம், ஆர்.​விஜய்​சங்​கர், விசிக துணை பொதுச்​செய​லாளர் கவுதம சன்னா, தலைமை நிலை​யச் செய​லா​ளர் பாலசிங்​கம், தகடூர் தமிழ்ச்​செல்​வன், இளஞ்​சேகு​வாரா, முதன்​மைச் செய​லா​ளர் ஏ.சி.பாவரசு, செய்தித் தொடர்​பாளர் கு.​கா.பாவலன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

விஜய் பேச்சுக்கு வரவேற்பு; ஆதவ் அர்ஜுனாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: சென்னை விமான நிலை​யத்​தில் செய்தி​யாளர்​களிடம் விசிக தலைவர் திரு​மாவளவன் கூறிய​தாவது: அம்பேத்கர் நூல் வெளி​யீட்டு விழா​வில் பங்கேற்​காததற்கு திமுக தரப்​பில் எந்த அழுத்​த​மும் காரணமில்லை. அழுத்​தத்​துக்கு பயந்து முடி​வெடுக்க இயலாமல் தேங்கி நிற்​கும் நிலை​யில் விசிகவோ, திரு​மாவளவனோ இல்லை. ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்​தில் எனக்கு உடன்​பாடில்லை. அந்த கருத்தை விசிக மறுக்​கிறது. கட்சி​யின் முன்னணி நிர்​வாகி​களுடன் கலந்து பேசி, கட்சி​யின் கட்டுப்​பாட்டை கேள்விக்​குள்​ளாக்​கும் வகையில் அவர் பேசுகிறார் என்ற அடிப்​படை​யில் ஆதவ் அர்ஜுனா​விடம் விளக்கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பு​வோம். விஜய்​யின் மனது மேடை​யில் இல்லாமல் என்னை நோக்​கியே இருந்​திருக்​கிறது. அவர் அங்கே இருந்​தா​லும் நான் எங்கே இருக்​கிறேன் என எண்ணிக் கொண்​டிருந்​திருக்​கிறார். நிகழ்ச்​சி​யில் நான் கலந்து கொள்ளாத ஆதங்​கத்​தில் அவர் அவ்வாறு பேசி​யிருக்​கிறார்.

வேங்​கைவயல் பிரச்​சினை​யில் பல்வேறு போராட்​டங்களை விசிக நடத்​தி​யிருக்​கிறது. இந்த அழுத்​தத்​தால் தான் வழக்கு சிபிசிஐடி வசம் மாற்​றப்​பட்​டது. இதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்​டிருக்​கிறது என முதல்​வரிடம் கேட்​டிருக்​கிறோம். குற்​றவாளிகளை காப்​பாற்ற வேண்டிய தேவை திமுக​வுக்​கோ, தமிழக அரசுக்கோ இல்லை என விளக்​கமளித்​திருக்​கின்​றனர். வேங்​கைவயல் பிரச்​சினையை விஜய் பேசுவது வரவேற்​கத்​தக்​கது. ஆனால் அதிமுகவோ, வேறு எதிர்க்​கட்​சிகளோ வேங்​கைவயல் விவகாரத்​தில் போராட்டம் நடத்​தவில்லை. குற்​றவாளிகள் கைது செய்​யப்பட வேண்​டும் என்ப​தைவிட திமுக கூட்​ட​ணி​யில் இருந்து திரு​மாவளவன் வெளியே வர வேண்​டும் என்பதே அவர்​களது நோக்​கமாக இருக்​கிறது.

திமுகவை எதிர்ப்பது மட்டுமே சரியாக இருக்​காது. அவ்வப்​போது பாஜகவை​யும் எதிர்க்க வேண்​டும் என்பது​போல் சிலர் பேசுகின்​றனர். மணிப்​பூர் விஷயத்​தில் விஜய்க்கு அக்கறை இருந்​தால் மத்​திய அரசை கண்​டித்து ஆர்ப்​பாட்​டம் நடத்த வேண்​டும். பிரதமரை சந்​தித்து ​முறையிட வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE