இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மியான்மர் நாட்டு மீனவர்கள் 4 பேர் கைது

By KU BUREAU

நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மியான்மர் நாட்டு மீனவர்கள் 4 பேரை இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்துக்கு கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இந்திய கடற்படை அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய கடல் எல்லைப் பரப்புக்குள் நின்று கொண்டிருந்த ஒரு பாய்மரப் படகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த 4 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர், அவர்களை கடலோரக் காவல் படை துணை தளபதி கணேஷ், கடலோரக் காவல் படை காரைக்கால் நிலையத் தளபதி சவுமே சண்டோலா முன்னிலையில், நாகை மாவட்ட கடலோரக் கடலோர குழும ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் நேற்று ஒப்படைத்தார்.

காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் இந்திய கடல் எல்லைப் பரப்புக்குள் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE