கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சிகளாக இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

By KU BUREAU

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்​கில் முன்​னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி உள்ளிட்​டோரை எதிர்​தரப்பு சாட்​சிகளாக விசா​ரிக்க அனுமதி அளித்து உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது.

கோடநாடு கொலை வழக்​கில் முன்​னாள் முதல்வர் பழனிசாமி, ஜெயலலி​தா​வின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன், உள்ளிட்டோரை எதிர்தரப்பு சாட்சிகளாக விசா​ரிக்க அனுமதி கோரி, இந்த வழக்​கில் கைதான தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தனர். ஆனால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசா​ரிக்க நீதி​மன்றம் அனுமதி அளித்​தது.

மறு ஆய்வு மனு தாக்கல்: இந்த உத்தரவை எதிர்த்து தீபு உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்​தனர். உயர் நீதி​மன்ற நீதிபதி பி.வேல்​முருகன் முன்பு இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நடந்து வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ரோமியோ ராய், ‘‘பழனிசாமி முதல்​வராக பதவி வகித்​ததால், அதை காரணம் காட்டி அப்போது அவரை விசா​ரிக்க அனுமதி மறுக்​கப்​பட்​டது. தற்போது, பழனிசாமி, சசிகலா உள்ளிட்​டோரை​யும் எதிர்​தரப்பு சாட்​சிகளாக விசா​ரிக்க வேண்​டும்’’ என்று வாதிட்​டார்.

200-க்கும் மேற்பட்ட சாட்சிகள் அரசு தரப்​பில் ஆஜரான குற்​ற​வியல் வழக்​கறிஞர் எஸ்.​வினோத்​ கு​மார், ‘‘கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 200-க்​கும் மேற்​பட்ட சாட்​சிகளிடம் விசாரணை நடத்​தப்​பட்டு, மேல்​விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தற்போது முதல்வராக பதவியில் இல்லை. அவரை எதிர்​தரப்பு சாட்​சியாக ஏன் விசா​ரிக்க கூடாது’’ என்று கருத்து தெரி​வித்து, தீர்ப்பை தள்ளி ​வைத்​திருந்​தார், இந்நிலை​யில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்​பளித்​துள்ள நீதிபதி வேல்​முரு​கன், நீல​கிரி நீ​தி​மன் றத்​தில் நடந்து வரும் இந்த வழக்கில்,எ​திர்​தரப்பு சாட்​சிகளாக அ​திமுக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி, சசிகலா, இளவரசி உள்​ளிட்​டோரை​யும் ​விசா​ரிக்க அனு​மதி அளித்து உத்​தர​விட்டுள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE