புதுச்சேரி: பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் நவ .30-ம் தேதி 50 செ.மீ. மழை பொழிந்தது. புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, 3.54 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும், முதல்கட்ட நிவாரணமாக ரூ.600 கோடி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரிக்கான வருவாய்த் துறை சிறப்புச் செயலர் குலோத்துங்கன் வெளியிட்ட உத்தரவில், "புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இப்பகுதிகள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.