அம்பேத்கர் சிலையுடன் விஜய் எடுத்த புகைப்படம் வைரல்: தவெக தொண்டர்கள் உற்சாகம்

By KU BUREAU

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளார். விஜய் அம்பேத்கர் சிலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் இன்று நடைபெற்று வரும் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் புத்தகத்தை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார்.தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்குப் பிறகு விஜய் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை விழா அரங்குக்கு விஜய் வந்தபோது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் ஆரவாரம் செய்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து விழா அரங்குக்கு வந்த அவர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த அம்பேத்கர் சிலையுடன் விஜய் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE