ராமநாதபுரம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தில் கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த ராஜா மணி (68) என்பவர் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜா மணியின் உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கீழச்சிறுபோது கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. கணவர் உயிரிழந்த தகவலறிந்து மனைவி அங்காளம்மை (63) துக்கத்தில் கதறி அழுது மயங்கி விழுந்து இறந்துள்ளார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் கீழச்சிறுபோது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE