மேட்டூர் நீர்வரத்து 32,240 கனஅடியாக அதிகரிப்பு

By KU BUREAU

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,246 கனஅடியாகவும், இரவு 29,021 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று காலை 32,240 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 111.39 அடியில் இருந்து 113.21 அடியாகவும், நீர் இருப்பு 80.40 டிஎம்சியில் இருந்து 83.05 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.82 அடி, நீர் இருப்பு 2.65 டிஎம்சி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE