வடியாத வெள்ளம் தொடரும் மீட்பு பணிகள்: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By KU BUREAU

புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் நிரம்பி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்வதாலும் இன்னமும் வெள்ள நீர் முழுமையாக வடியாத காரணத்தினாலும் இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக செயல்படும் 22 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக செயல்படாத பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் 3 ஊராட்சி ஒன்றியங்களில் (கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம்) உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர பகுதிகளில் இன்னமும் வெள்ளம் முழுமையாக வடியாததால் அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE